அராபத்துடன் பாவல் தொலைபேசியில் பேச்சு
ஜெருசலேம்:
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பாலஸ்தீனத்தின் முக்கியமான நகரங்களுக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்து அடித்து துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. பாலஸ்தீன விடுதலை அமைப்பினரும் இஸ்ரேலுக்குள் மனித வெடிகுண்டுகளாகப் புகுந்துபல உயிர்களைப் பலி வாங்கியுள்ளனர்.
இதற்கிடையே மேற்காசிய நிலவரத்தால் கவலை (?) அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாலஸ்தீனத்தைவிட்டு இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் அராபத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாவல், புஷ் கூறிய கருத்துக்களைஅராபத்துடன் பகிர்ந்து கொண்டார். விரைவில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு பாவல் நேரில் செல்லவுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இன்று பிற்பகல் அமெரிக்க தூதர் ஆன்டனி ஜின்னியையும் அராபத் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதற்கிடையே மேற்காசியாவில் அமைதி நிலவுவதற்காக பாவல் எடுக்கும் முயற்சிகளை ஐ.நா. சபைவரவேற்றுள்ளது.
மேற்காசியாவில் பாவல் மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணம், பாலஸ்தீன-இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலானமோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த இரு நாடுகளுக்குமிடையே போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் விரும்புகின்றன. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடத்திய ஓட்டெடுப்பை சிரியா மட்டும்புறக்கணித்தது. பின்னர் அதுவும் போர்நிறுத்தத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
இதற்கிடையே நாப்லஸ் நகரை முற்றுகையிட்டு இஸ்ரேல் படைகள் தாக்கியதில், ஏழு பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications