சென்னை: மண்ணெண்ணையை குடித்த குழந்தை சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையை அடுத்த ஆவடி அருகே மண்ணெண்ணையைக் குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாகஇறந்தது.
சென்னை அருகே உள்ளது ஆவடி. அதற்கு அருகே உள்ளது கோணம்பேடு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குமாரன்.இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு வினோத் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
குமாரன் கூலி வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல அவர் வேலைக்குச் சென்ற பின் குழந்தையை விளையாடவைத்து விட்டு வீட்டிற்குள் வேலையாக இருந்தார் லட்சுமி.
அப்போது, வீட்டின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்த வினோத் அதைக்குடித்துள்ளான். இதையடுத்து அவன் மயங்கி விழுந்தான்.
பதறிப்போன லட்சுமி, உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வினோத்தை எடுத்துக் கொண்டுஓடினார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வினோத் இறந்து போனான்.












Click it and Unblock the Notifications