சென்னையில் ஈவ் டீசிங் செய்த 13 மாணவர்கள் கைது
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பெண்களைக் கேலி செய்து, கிண்டலடித்த 13 மாணவர்களை சிறப்பு பெண்போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையப் பகுதியில் பெண்களை கேலி செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவருவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இத்தனைக்கும் பஸ் நிலையத்திற்கு எதிரில்தான் போலீஸ் நிலையம் உள்ளது. இந்தக் கும்பலை கையும், களவுமாகபிடிக்க பெண் போலீசார் அடங்கிய ஈவ் டீசிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பிய ஒரு பஸ்சில் "மப்டி" உடையில் சென்றனர். அப்போது 13மாணவர்கள், பஸ்சில் சென்ற பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
உடனே "மப்டி"யில் இருந்த பெண் போலீசார் அந்த மாணவர்களைப் பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச்சென்றனர். இந்த 13 மாணவர்களும் விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 13 பேருக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications