ஸ்டாலின் பதவியை பறித்துக் காட்டுவேன் - ஜெ.; பறிக்க முடியாது - ஸ்டாலின்
சென்னை:
சென்னை மாநகர மேயரான மு.க. ஸ்டாலினின் பதவியைப் பறித்தே காட்டப் போவதாக முதல்வர் ஜெயலலிதாகூறியதற்குப் பதிலடியாக, தன் பதவியைப் பறிக்க முடியாது என்று அவர் சவால் விட்டுள்ளார்.
சட்டசபைக் கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
ஒருவரே எம்.எல்.ஏ. பதவியையும் மேயர் பதவியையும் வகித்து வருவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவிரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருவதால், அதுகுறித்து இப்போது நான் எதுவும்சொல்ல முடியாது.
அம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு இதுதொடர்பான விவாதம் நடைபெறும். அப்போது அந்தச் சட்டத்தைப்பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக சட்டசபை வாசலில் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே என்னுடைய பதவியைக் காலி செய்வதற்கானபல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
சட்ட ரீதியாக மேயர் பதவியை நான் வகிக்க முடியாமல் செய்வதற்கு அவர்கள் "டிரை" பண்ணுகிறார்கள்.
அப்படி என்னுடைய பதவியைப் பறிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு ஒன்றும் பறிக்கமுடியாது என்று நான் கூறுகிறேன்.
முதலில் அந்தச் சட்ட மசோதாவை அவர்கள் தாக்கல் செய்யட்டும், பார்க்கலாம். அதற்குப் பிறகு திமுக தலைமைஎன்ன கூறுகிறதோ அவ்வாறே நடந்து கொள்வேன் என்று ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications