ஜெ. முன்னிலையில் குவைத் பெண்ணுக்கு நாளை திருமணம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ள குவைத் பெண் தலால் ஆஸ்மிக்கும் அவரது ஆந்திரமாநில காதலர் காதர் பாட்சாவுக்கும் வரும் 6ம் தேதி சென்னை அல்லது கடப்பாவில் திருமணம் நடக்கலாம் என்றுதெரிகிறது.
இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகளை காதர் பாட்சாவின் உறவினர்கள் செய்து வருகின்றனர்.
முஸ்லீம் மத மரபுப்படி காதர் பாட்சாவின் சொந்த ஊரான கடப்பாவில் உள்ள ஜமாத்தின் அனுமதிக் கடிதம்பெறப்படும்.
பின்னர் அந்தக் கடிதம் சென்னையில் உள்ள ஜமாத்திடம் வழங்கப்படும். அதன் பின்னர் திருமணம் நடைபெறும்.
அனேகமாக ஜெயலலிதாவின் முன்னிலையில் திருமணம் சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது.இல்லாவிட்டால் கடப்பாவிலேயே திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications