குவைத் பெண் "எஸ்கேப்": தூதரக அதிகாரி ஏமாற்றம்
சென்னை:
குவைத் பெண் தலால் ஆஸ்மி தன் காதலன் காதர் பாட்சாவுடன் ஆந்திராவுக்குச் சென்று விட்டதால், அவரைச்சந்திப்பதற்காக டெல்லியிலிருந்து வந்த அந்நாட்டு தூதரக அதிகாரி நொமீர் அல் காருனி ஏமாந்து போனார்.
தன் காதலனுடன் போலி பாஸ்போர்ட் மூலம் ஓடி வந்துவிட்டதால், தன்னை குவைத்தில் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்றும் தனக்கு மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்றும் ஆஸ்மி கூறுவதெல்லாம்உண்மையல்ல என்று காருனி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறினார்.
ஆஸ்மியைச் சந்தித்து குவைத்துக்குத் திரும்ப அந்தப் பெண்ணுக்கு விருப்பமுள்ளதா என்பது பற்றி பலவிதமானவிசாரணைகளை நடத்துவதற்காக காருனி இன்று காலை சென்னைக்குப் பறந்து வந்தார்.
ஆனால் அதற்குள் ஆஸ்மியை அழைத்துக் கொண்டு பாட்சா ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பாவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆஸ்மியைச் சந்திக்க முடியாமல் விழித்துக் கொண்டிருக்கும் காருனி, ஆஸ்மி எங்கே இருக்கிறார்என்பதை உள்ளூர் போலீசார் கூற மறுப்பதாகப் புகார் கூறினார்.
இன்னும் இரு நாட்களுக்கு சென்னையிலேயே முகாமிட்டு ஆஸ்மியைச் சந்தித்துவிட்டுத்தான் டெல்லி திரும்புவேன்என்றும் காருனி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆஸ்மி இருக்குமிடம் பற்றி விசாரிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட டி.எஸ்.பியைச்சந்திக்கவுள்ளார் காருனி.












Click it and Unblock the Notifications