குவைத் பெண் மன நலம் பாதிக்கப்பட்டவராம் !
டெல்லி:
இந்தியாவில் தங்க அடைக்கலம் கோரியுள்ள குவைத் பெண் தலால் ஆஸ்மி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றுகுவைத் அரசு கூறியுள்ளதையடுத்து, டெல்லியிலுள்ள குவைத் தூதரக அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணை நடத்தஇன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.
போலி பாஸ்போர்ட் மூலம் ஆந்திராவைச் சேர்ந்த தன் காதலரான காதர் பாட்சாவுடன் குவைத்திலிருந்து வந்தஆஸ்மி, கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவையடுத்து, ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டார்.இப்பெண்ணுக்கும் காதர் பாட்சாவுக்கும் தானே திருமணம் செய்து வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்மி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று குவைத் அரசு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாகசர்வதேச போலீசான "இன்டர்போல்" மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு குவைத் ஒரு கடிதத்தைஅனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆஸ்மியிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக குவைத் தூதரக அதிகாரியான காலித் ரஸ்னிஇன்று சென்னை வருகிறார்.
காதலனுடன் தப்பி வந்ததால் மீண்டும் குவைத் திரும்பும்போது, குவைத் மக்கள் தன்னை கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று ஆஸ்மி கூறுவது கற்பனையானது என்ற ரஸ்னி, வெளிநாட்டினரைத் திருமணம் செய்வதற்குஎந்தத் தடையும் தங்கள் நாட்டில் கிடையாது என்றும் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications