முஸ்லீம்கள் யாழ்ப்பாணம் திரும்பலாம்: புலிகள்
கொழும்பு:
இலங்கையில் அமைதி திரும்பியவுடனே வடக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லீம்களும் தங்கள்சொந்த வீடுகளுக்கும் திரும்பலாம் என்று விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்கூறினார்.
இந்தச் சம்பவத்திற்காக தற்போது தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாக முல்லைத் தீவு மாவட்டத்திலுள்ளபுதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற புலிகள் பேரணியின்போது உரையாற்றிய பாலசிங்கம், இதை மறந்துதங்களை மன்னிக்குமாறும் முஸ்லீம் சமுதாயத்தைக் கோரியுள்ளார்.
தமிழ் ஈழம் என்பது முஸ்லீம்களுக்கும் சேர்ந்ததுதான் என்று கூறிய பாலசிங்கம், அமைதி திரும்பியதும்வடகிழக்கில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பிரச்சனை தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் விரைவில் முஸ்லீம் தலைவர்களைச் சந்திக்கப்போவதாகவும் பாலசிங்கம் கூறினார். முஸ்லீம்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதை பிரபாகரனும் மிகவும்விரும்புவதாகவும் பாலசிங்கம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications