ஒப்பந்தம் மீறலா? - பிரபாகரனைச் சந்திக்கிறது கண்காணிப்புக் குழு
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறியதாக வந்த புகார் குறித்து விளக்கம்கேட்பதற்காக புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கண்காணிப்புக் குழுவினர் வரும்ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) சந்திக்கவுள்ளனர்.
இவற்றில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 31 புகார்கள் பதிவாகியுள்ளதாகக்குறிப்பிடும் "டெய்லி நியூஸ்", கண்காணிப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நார்வே ராணுவ ஜெனரலுமானட்ரோன்ட் புருஹோவ்டே இதுகுறித்து புலிகளிடம் விளக்கம் கேட்பார் என்றும் தெரிவிக்கிறது.
பல இடங்களில் ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் பயங்கரமான ஆயுதங்களுடன் புலிகள்ஊடுருவியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிக்கை கூறியது.
இதற்கிடையே வடகிழக்குப் பகுதிகளில் வாழும் முஸ்லீம்களின் பாதுகாப்புக் குறித்து, பிரபாகரனையும் புலிகளின்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தையும் சந்தித்து இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் பேச்சுநடத்தவுள்ளனர்.
இவை எல்லாம் ஒரு புறம் இருக்கையில், ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பல பகுதிகளிலும் தங்களுடையஅலுவலகங்களைப் புலிகள் படிப்படியாகத் திறந்து கொண்டே வருகின்றனர். இங்கெல்லாம் புலிகளுடன் அரசுஊழியர்களும் சேர்ந்தே செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
சில ஒப்பந்த மீறல்கள் இருந்த போதிலும், இதுபோன்ற ஒற்றுமையாக நடைபெறும் நிகழ்ச்சிகள், விரைவில்துவங்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications