காதலியை விபச்சாரியாக்கிய கேடி கைது: கலெக்டர் உத்தரவால் உடனடி நடவடிக்கை
ஆத்தூர்:
தனது காதலியையே விலை மாதாக்கி பணம் சம்பாத்தி வந்த கேடி மணியை போலீசார் கைது செய்தனர்.
கதீஜா என்ற இந்தப் பரிதாபப் பெண் அவரிடம் இருந்து தப்பி தங்க இடம் இன்றி ஒரு இஸ்லாமிய தர்காவில்ஓதுவார் ஒருவரிடம் தஞ்சம் புகுந்தார். பல பேரால் அனுபவிக்கப்பட்டதால் இந்தப் பெண் உடல் நிலைபாதிக்கப்பட்டுள்ளார். மனநிலையும் குன்றியுள்ளார்.
தனி அறையில் மணியால் அடைத்து வைக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட இந்தப் பெண்ணின் சொத்துக்கள்தொடர்பான பத்திரங்களையும் மணி பறித்துக் கொண்டார்.
காக்கிக் சட்டை மிருகங்கள்:
அவரிடம் இருந்து தப்பி வந்து முதலில் ஓடிய இடம் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் தான். ஆனால், அந்தஸ்டேசனின் இன்ஸ்பெக்டர் முதல் வெளியே நின்றிருந்த பாரா காவலர் வரை யாருமே இவரது புகாரை வாங்கமறுத்துவிட்டனர். காசு தராத யார் கொடுக்கும் புகார்களையும் பதிவு செய்வதில்லை என்பதை இந்தக் காவல்நிலையத்தில் ஒரு பாலிசியாகவே வைத்திருக்கிறார்கள்.
இதனால் இவரை விரட்டி விட்டனர். இந் நிலையில் தான் இது குறித்து காலைக் கதிர் நாளிதழும், தட்ஸ்தமிழ்.காமும்செய்திகள் வெளியிட்டன.
பெண் போலீசாரின் உதவி:
இதையடுத்து இந்தப் பெண் சேலம் மகளில் காவல் நிலையத்தில் தனது நிலையை விளக்கினார். அக் காவல் நிலையசப் இன்ஸ்பெக்டர் மல்லிகேஸ்வரி உடனடியாக வழக்கைப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தார்.
மேலும் சேலம் மாவட்டக் கலெக்டர் ராதாகிருஷ்ணன் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்தார். அவருக்கு அனைத்துஉதவிகளும் செய்வதாக உறுதியளித்த கலெக்டர் குற்றவாளியை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மகளிர் காவல் நிலையத்திலேயே ஒரு தனிப் படை அமைக்கப்பட்டது. பெண் போலீசாரே விசாரணைநடத்தி கேடி மணியை ஒரே நாளில் மடக்கிப் பிடித்தனர்.
அவனது வீட்டிலிருந்த கதீஜாவின் சொதுக்கள் அடங்கிய பத்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்த முழு விவரம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹனிபா. இவர்சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பென்சனில் வாழ்க்கைய நடத்திக்கொண்டிருந்தார்.
இவரது மனைவி அப்ஷத் ஆயிஷா. இவர்களின் மகள்கள் ஜைனத், கதீஜா (வயது 21).
சில ஆண்டுகளுக்கு முன் ஹனிபா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, இரண்டு மகள்களுடன் கணவரின் அரைபென்சனில் வசித்து வந்தார் ஆயிஷா. கணவர் இறந்தபோது கிடைத்த அரசின் உதவிப் பணத்தை வைத்துஜைனத்துக்கு திருமணம் செய்து வைத்தார். மகள் கதீஜாவுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் தாயாரும் இறந்துபோனார். இதனால், கதீஜா அனாதையானார். தனது சகோதரி உள்பட உறவினர்கள்யாரும் தனக்கு ஆதரவளிக்காததால் தனியாக வாழ்ந்து வந்தார்.
அப்போது மணி என்பவன் இவருக்கு அறிமுகமானார். கதீஜாவை காதலிப்பது போல மணி நடித்தார். கதீஜாவின்பெற்றோர் விட்டுச் சென்ற சொற்ப சொத்துக்களின் பத்திரகங்களையும் நைசாகப் பேசி மணி வாங்கிக் கொண்டார்.
பின்னர் கதீஜாவை வைத்து பணம் பண்ண நினைத்த மணி அவரை தனது நண்பர்களுக்கு இரையாக்கினார். முதலில்மயக்க மருந்து கொடுத்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் மணி.
இது தொடர்ந்தது. பின்னர் வெளிப்படையாகவே அவரை மணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினான். இதையடுத்துஅவனிடமிருந்து தப்ப கதீஜா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. முழு நேர விலை மாதாகவே அவரை மணிமாற்றினார்.
பூட்டப்பட்ட தனி அறையில்...
தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு இரவு, பகலாக அவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அதைப் பொறுக்க முடியாத கதீஜா அவரிமிருந்து தப்பினார்.
அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் மனிதாபிமானம் இல்லாமல் விரட்டிவிடவே ஒரு பள்ளிவாசலில்தஞ்சமடைந்து பின்னர் பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
காப்பாற்றிய கலெக்டர்:
இந்த விவகாரத்தில் மாவட்டக் கலெக்டர் ராதாகிருஷ்ணனின் செயல் மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது.கதீஜாவை நேரில் பார்த்த அவர் அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டு கண் கலங்கிவிட்டார்.
உடனே மணியைப் பிடிக்க உத்தரவிட்டதோடு, இந்தப் பெண்ணுக்கு நிவாரணம் அளிக்கவும், சமூக நலத்துறையின்உதவித் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இச் செய்தியை காலைக் கதிர் நாளிதழோடு தட்ஸ்தமிழ்.காம் தான் முழு விவரங்களுடன் வெளியிட்டது.இதையடுத்து இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications