அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொடர் அலட்சியம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியத்தால் விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு அக்கழகம்தரவேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது.

தர்மபுரியைச் சேர்ந்தவர் குமார். இவர் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது, விபத்துக்குள்ளாகிபடுகாயமடைந்தார். இதையடுத்து தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, குமாருக்கு போக்குவரத்துக் கழகம் ரூ.70 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றுதீர்ப்பளித்தார்.

ஆனால் தர்மபுரி கிளை அரசுப் போக்குவரத்துக் கழகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் குமார் மீண்டும்நீதிமன்றத்தை நாடினார்.

அதன்படி போக்குவரத்துக் கழகம் ரூ.1,16,000 தொகையை குமாருக்கு வழங்க உத்தரவிட்டது. இதையும்அக்கழகம் அலட்சியம் செய்யவே, சளைக்காத குமார் மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தர்மபுரி கிளை போக்குவரத்துக் கழகத்திலுள்ள ரூ.2,30,000 மதிப்புள்ள பொருட்களைஜப்தி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+