சென்னை-புதுவை கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு சலுகைகள்
சென்னை:
சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்லும் வாகனங்களுக்குப்பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் அவர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவிலேயே சிறந்த சாலை என்ற பெயரைப் பெறும் அளவுக்கு கிழக்குக் கடற்கரைச் சாலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பல்வேறு முக்கிய வசதிகள், சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தினசரி இந்த சாலையில் செல்பவர்களின் வசதிக்காக பல சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை முதல் மாமல்லபுரம் வரை, மாமல்லபுரம் முதல் பாண்டிச்சேரி வரை மற்றும் பாண்டிச்சேரி முதல் சென்னைவரை என மூன்று நிலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தினசரி செல்பவர்களின் வசதிக்காக 10 தல் 40 சதவீதம் வரை கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சைக்கிள்கள், டூ வீலர்கள், டிராக்டர்கள், மோட்டார்கள் பொருத்தப்படாத பிற வாகனங்கள், பால் வண்டிகள்,தீயணைப்பு வண்டிகள் மற்றும் அவசர கால வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து முழுமையான கட்டணவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications