உக்ரைன் கப்பல் ஊழியரை தாய் நாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தூத்துக்குடி அருகே உக்ரைன் நாட்டு கப்பல் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கப்பல் ஊழியர், தற்போதுகவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரை சொந்த நாட்டுக்கே அனுப்பி விட சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த "அலெக்சாண்டர்" மற்றும் "ஒயிட் கிளிப்பர்" என்ற இரு கப்பல்கள் கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கின.
இந்த இரு கப்பல்களின் உரிமையாளர்களும், கப்பல்களை அங்கேயே விட்டுவிட்டு உக்ரைனுக்குத் தப்பி விட்டனர்.கப்பலில் இருந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட இரு கப்பல்களையும் ஏலத்தில் விற்றுவிட சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஊழியர்களில் ஒருவரான ஒலெக்சாண்டர் என்பவரின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்துஅவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சமீபத்தில்கவலைக்கிடமான நிலையை அடைந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உடனடியாக ஒலெக்சாண்டரைஉக்ரைனுக்கு அனுப்பிவிட வேண்டும் என்றும் இந்திய மண்ணில் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அது பல்வேறுபிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி சிவசுப்பிரமணியம், ஒலெக்சாண்டரை உக்ரைனுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தக் கப்பல்களின் பணியாளர்களுக்கு கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications