மேயரை அரசு மதிக்க வேண்டும்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேயர் பதவியை அரசு மதிக்காத நிலையில், அதன் தலைவராகிய முதல்வர் ஜெயலலிதாவை எப்படிச் சந்திப்பதுஎன்று சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வராகப் பதவியேற்ற தன்னை வந்து சந்திக்காத நிலையில், மேயர் பதவிக்குரிய மரபு குறித்து மேயர் ஸ்டாலின்எப்படிப் பேசலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா கேட்டிருந்தார். இதுகுறித்து சென்னையில்செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,

மேயர் என்ற பதவிக்குரிய மரபுகள் காக்கப்பட வேண்டும் என்று ஐந்து முறை அரசுக்குக் கடிதம் அனுப்பினேன்.ஆனால் இதுவரை பதிலே இல்லை.

மேயர் பதவியை அரசே மதிக்காதபோது, அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை நான்எப்படி சந்திப்பது?

மேயர் பதவி வேண்டுமா இல்லை எம்.எல்.ஏ. பதவி வேண்டுமா என்பது குறித்து நான் விரைவில் முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வர் சட்டசபையில் கூறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் நான் சென்று அவரைப் பார்த்தால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவரைப்பார்த்ததாக யாரும் கூற மாட்டார்களா?

முதலில் மேயருக்குரிய கெளவரத்தை அரசு கொடுக்கட்டும். அதன் பிறகு மேயர் என்ற முறையில் எனது கடமையைநான் செய்வேன் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+