போலீசாரை கொல்ல சதி: 4 தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது
சென்னை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார்கைது செய்தனர்.
வெடிகுண்டு வைத்து பல்வேறு இடங்களைத் தகர்ப்பது குறித்து தமிழர் விடுதலை இயக்க அலுவலகத்தில்ஆலோசனை நடந்து வருவதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக தமிழர் விடுதலை இயக்க அலுவலகத்திற்கு விரைந்தனர். அங்கிருந்தசுந்தர்ராஜன், தங்கசாமி, செந்தில், செல்வன் ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையின்போது, அரியலூர் மாவட்டத்தை பெரம்பலூருடன் இணைப்பதைக் கண்டித்துநடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வந்துள்ள 50 போலீசாரை வெடிகுண்டு வைத்து கூண்டோடுகொல்ல இவர்கள் திட்டமிட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிகுண்டுகளும்பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுடைய அலுவலமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவன் இளவரசன் உள்ளிட்ட பலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications