ஜெ, சசியை விசாரித்த நீதிபதிகள் அதிரடி இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஜெயலலிதாவையும் சசிகலாவையும் விசாரித்து வந்தசிறப்பு நீதிமன்றங்களின் 2 நீதிபதிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருணாநிதி கைது செய்யப்பட்டபோது போலீசாரின் செயல்களைக் கண்டித்த முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக்குமாரும் அதிரடி டிரான்பஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 32 மாவட்ட நீதிபதிகளும் இன்று டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாகவிசாரிக்க திமுக ஆட்சியில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. சிங்கார வேலர் மாளிகையில்அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் படிக்கட்டுகளில் கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும்அவரது முன்னாள் அமைச்சர்கள் ஏறி இறங்கி வந்தனர்.

இவர்கள் மீது மொத்தம் 42 வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டன. இதில் 35 வழக்குவிசாரணைகள் முடிந்துவிட்டன. மேலும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மீதியிருக்கும் வழக்குகள்:

இதில் முக்கியமான வழக்குகள் 3. முதல் வழக்கு வருமானத்துக்கு மீறி ஜெயலலிதா சுமார் 66.65கோடி ரூபாய்சொத்து சேர்த்தது. இரண்டாவது வழக்கு லண்டனில் சட்டவிரோதமாக ஜெயலலிதாவும், சசிகலாவின் அக்கா மகன்தினகரனும் சேர்ந்து ரூ. 43.93 கோடி முதலீட்டில் ஹோட்டல் வாங்கியது. மூன்றாவது வழக்கு ஸ்பிக் பங்குகளைமுறைகேடாக தனியாருக்கு விற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவும், ஸ்பிக் அதிபர் முத்தையா செட்டியார், அரசுஅதிகாரி ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ரூ. 28.28 கோடி முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மூன்று வழக்குகளையும் விசாரித்து வந்த முதலாவது சிறப்பு நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்இன்று தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல இரண்டாவது தனி நீதிமன்றத்தின் நீதிபதி தார்வேசும் தூக்கி அடிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டமுதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்காக பேசியவர் மாற்றம்:

அதே போல கருணாநிதி கைது சம்பவத்தின்போது போலீசாரின் செயல்களை வெளிப்படையாகக் கண்டித்தசென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கிருஷ்ணகிரிக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலித முதல்வரானவுடன் திமுக தலைவர் கருணாநிதியை அதிரடியாகக் கைது செய்தார். அப்போதுநள்ளிரவில் கருணாநிதி சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அசோக் குமார் முன் தான் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டார் அசோக்குமார். ஆனால், கருணாநிதியை மரியாதையாக நடத்தவேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதையும் மீறி கருணாநிதியை போலீசார் தவறாக நடத்தியபோது அதை மிகக் கடுமையாக கண்டித்தார்.கருணாநிதியை பிச்சைக்காரர் மாதிரி நடத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று போலீசாரிடம்நீதிமன்றத்திலேயே சீறியவர் அசோக் குமார்.

ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பியவர்:

இவர் தான் லண்டன் ஹோட்டல் வழக்கையும் விசாரித்து வந்தார். அப்போது ஜெயலலிதா நேரில் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டார். இதற்கான சம்மனை ஜெயலலிதாவிடம் ஒப்படைக்க போலீசார்தவறியபோது, நீதிமன்ற அலுவலர் மூலம் அந்த சம்மனை கொடுக்கச் செய்தார்.

இதனால், அசோக் குமார் ஜெயலலிதாவின் ஹிட்-லிஸ்டில் இருந்து வந்தார். இப்போது தூக்கி எறியப்பட்டுவிட்டார்.

இவருக்கு பதிலாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி ராமலிங்கம் சென்னை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.

அன்பழகன் பதவியில் சிறு மாற்றம்:

அதே நேரத்தில் மூன்றாவது சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக இருந்த அன்பழகன், முதலாவது சிறப்புநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தான் ஜெயலலிதாவை டான்சி வழக்கில் குற்றவாளியாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இவரை ஜெயலலிதா இடமாற்றம் செய்யாமல் 3வதுசிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதலாவது நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளார். இனி இவர் தான் லண்டன் ஹோட்டல்வழக்கு, சொத்து சேர்த்த வழக்குகளை விசாரிப்பார்.

நீதிபதிகளின் இடமாற்றம் அரசியல்ரீதியிலான பழி வாங்கல் இல்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்வதற்காகநீதிபதி அன்பழகனை அரசு விட்டு வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ரொம்ப நியாயமான அரசாம்:

அதே போல நாமக்கல்லுக்கு தூக்கி அடிக்கப்பட்டு நீதிபதி தார்வேஷ் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து அந்தவழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் இவர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அரசு மிக நியாயமாக நடந்து கொண்டுள்ளதாக காட்டிக் கொள்வதற்காகவே இவர்இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்த சிறப்பு நீதிமன்றங்களின் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்குநீட்டித்தார். தன்னை விசாரிக்க அமைக்கப்பட்ட அதே நீதிமன்றங்களில் திமுக தலைவர்களை விசாரிப்பதற்காகஇந்தக் கால நீட்டிப்பை ஜெயலலிதா அறிவித்ததாகக் கருதப்பட்டது.

பின்னர் வெறும் 7 வழக்குகள் மட்டுமே இருப்பதால் 3ல் 2 சிறப்பு நீதிமன்றங்களை மூடிவிட அரசுதிட்டமிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்தார்.

அதற்கு முன்னதாக இப்போது நீதிபதிகள் பந்தாட்டம் நடந்துள்ளது.

ஆட்டம் ஆரம்பம்:

கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதிலிருந்தே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டமுக்கிய அதிகாரிகள் பந்தாடப்பட்டு வந்தனர். அதன் பிறகு பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்தில் ஓரளவுஇந்தப் "பந்தாட்டம்" குறைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+