35 பாலஸ்தீனர்கள் கொலை: இஸ்ரேல் மிருகத்தனம்

Subscribe to Oneindia Tamil

நப்லுஸ்:

பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் இஸ்ரேல் ராணுவம் நேற்று மட்டும் சுமார் 35பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது.

வெஸ்ட் பேங்கின் முக்கிய நகரான நப்லுசில் இந்தச் சம்பவம் நடந்தது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும்பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கை தாண்டிவிட்டது.

இது தவிர ஹெப்ரானில் பாலஸ்தீனர்களின் வாகனங்கள் மீதும் இஸ்ரேலிய ராணுவம் ராக்கெட்களால் தாக்குதல்நடத்தியது.

இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைகேட்டுக் கொண்ட பின்னரும் தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் தொடர்ந்து ரமலாவில் ஒரு வீட்டில் முற்றுகையிடப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதித்த இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்குமுழு ஆதரவு அளித்துள்ளன.

இஸ்ரேலின் இந்த அடக்குமுறையை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியும் அதையும்இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஆண்டனி ஜின்னி நேற்று அராபத்தை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குஇஸ்ரேல் ராணுவம் அனுமதி அளித்தது.

இந்த விவகாரம் குறித்துப் பேச இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கஅதிபர் புஷ்சுடன் அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சு நடத்துவார்.

இந் நிலையில் பாலஸ்தீனம் தவிர இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கு எதிரானபோராட்டங்கள் வெடித்துள்ளன.

வேறொரு நாடு இது போன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் உடனே படைகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்அமெரிக்கா இஸ்ரேலிடம் ஏன் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்று கேள்விகள் உலகம் முழுவதும்எழுந்துள்ளன. இஸ்ரேலை அமெரிக்கா தான் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டுள்ளதாக ஈரான், ஈராக் போன்றநாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதே நேரத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்துத் தகவல் சேகரிக்கச் செல்லும்நிருபர்களையும் அந் நாடு தாக்கி வருகிறது. நேற்று அராபத்தையும், ஆன்டனி ஜின்னியையும் சந்தித்துவிட்டு வந்துகொண்ட நிருபர்களின் கார்கள் மீதும் இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கியால் சுட்டன. இதற்கு சர்வதேச அளவில்கண்டனம் எழுந்துள்ளது.

பிரச்சனைக்குரிய பகுதிகளில் இருந்து அமெரிக்கர்களும் பிரிட்டிசாரும் வெளியேருமாறு இரு நாடுகளும்கூறியுள்ளன. இவர்கள் சிறப்பு ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 35 பேரும் பாலஸ்தீனத்திற்குள் வைத்தே கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தங்கள் பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துத் தாக்குதல் நடத்திய இவர்கள்கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+