தர்மபுரியில் அதிரடி கள்ளச் சாராய வேட்டை: 300 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி கள்ளச் சாராய வேட்டையின்போது 300 பேரைக்கைது செய்த போலீசார், சுமார் 3,750 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கடந்த சில நாட்களாகவேபோலீசாருக்குத் தகவல்கள் வர ஆரம்பித்தன.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக இப்பகுதிகளில் சத்தமே இல்லாமல் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தக் கள்ளச் சாராய வேட்டையின்போது சுமார் 3,750 லிட்டர் சாராயத்தைப் போலீசார் கைப்பற்றினர். இவற்றின்மதிப்பு சுமார் ரூ.6 லட்சம்.
இது தொடர்பாக 450 பேர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார், இதுவரை 300 பேரைக் கைது செய்து நீதிமன்றக்காவலில் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications