தலைமைச் செயலகத்தைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: கடைகளை காலி செய்ய 48 மணி நேரம் கெடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் சட்டமன்றமும் தமிழக அரசின் தலைமைச் செயலகமும் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தலைமைச் செயலகத்துக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

அல்-உம்மா தீவிரவாதிகளால் தலைமைச் செயலகம் தாக்கப்படலாம் என்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்துள்ளதையடுத்துஇந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே மீட்டுச் செல்லப்பட்ட அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி மற்றும் சிலர் சேர்ந்து இந்த தாக்குதலுக்குத்திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கோட்டை வளாகத்தில் உள்ள அனைத்து நுழை வாயில்களிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாத யாரையும் அவர்கள் உள்ளே அனுப்ப மறுக்கின்றனர்.

முறையான அடையாள அட்டைகளோடு கோட்டை வளாகத்திற்கு வருமாறு அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள்,பத்திரிக்கையாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மிக பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான யாரும் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்களுக்கு சிறப்பு பாஸ் தரப்பட்டு தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள்மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையிடப்படுகின்றனர்.

மேலும், கோட்டை வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் இமாம் அலியின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் அனைத்துக் கதவுகளும் பூட்டப்பட்டுவிட்டன. ஒரே வழி மட்டுமே திறந்துள்ளது. அதில் பெரும் எண்ணிக்கையில்போலீசார் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர கோட்டை வளாகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகள், உணவு விடுதிகள், டீ கடைகளை உடனடியாகக் காலிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கடைகள் 25 வருடங்களாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.கடைகளை காலி செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல கடை உரிமையாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

வருடக்கணக்கில் கடை வைத்து வாழ்ந்து வரும் எங்களை திடீரென காலி செய்யச் சொன்னால் எங்கே போய் என்ன செய்வதுஎன்றே தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இவர்களுக்கு மாற்றிடம் தரப்படும் என கோட்டை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நாடாளுமன்றம் தாக்குதலுக்குள்ளானதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்திற்குகடும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலால் கோட்டை வளாகத்தில் பொதுமக்களிடம் இருந்து முதல்வர் ஜெயலலிதா மனு வாங்கும் நிகழ்ச்சி கூட தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

டி.ஜி.பி. அலுவலகத்துக்கும் பாதுகாப்பு:

கோட்டை அமைந்துள்ள அதே கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கும் மிகபலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இங்கு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள் ஏந்திய போலீசார் 24 மணி நேரப்பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு வரும் வாகனங்கள் நவீன கருவிகளைக் கொண்டு சோதனையிடப்படுகின்றன.

இமாம் அலியைத் தப்பவிட்டு கேவலப்பட்ட போலீஸ் நேற்று தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும்தப்பவிட்டு மேலும் அசிங்கப்பட்டு போய் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறையில் ஊழல், லஞ்சம்,ஒழுங்கின்மை ஆகியவை அதிகரித்து வருவது தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகஅமைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+