தலித் பஞ்சாயத்துகளில் திட்டமிட்டபடி தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய பஞ்சாயத்துத் தலைவர்களின் தேர்தல் திட்டமிட்டபடிநடத்தப்படும் என்று மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் கூறியுள்ளார்.

சட்டசபையில் இதுகுறித்து அவர் கூறுகையில், தலித் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்குரிய தேர்தலைநடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.

தற்போது தலைவர் பதவிக்குரிய தேர்தல் மட்டுமே நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் 6 மாதங்கள்வரை பதவி வகிக்கலாம். அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்குவார்.இதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்றார் அவர்.

இங்கு தலித்களுக்கு எதிரான இன்னொகு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலமுறை இங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இந்த தலித் எதிர்ப்பு ஜாதியினரை அடக்கி தேர்தல் நடத்த வேண்டிய அரசு அதைச் செய்யாமல் இருந்து வந்தது.இப்போது சட்டரீதியில் பிரச்சனை வரும் என்பதால் இந்தத் தேர்தல்களை நடத்துகிறது.

இங்கு போட்டியிடும் தலித்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உண்டு எனசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரும் தலித் எதிர்ப்பு ஜாதியினருக்கே ஆதரவாக உள்ளதால் பல தலித் வேட்பாளர்களும் மத்தியப்படைகளின் ஆதரவைக் கோரியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+