போலீசாரிடமிருந்து "எஸ்கேப்" ஆன தமிழர் விடுதலை இயக்க கைதி
மதுரை:
கால்களை செயினால் கட்டிப் போட்டிருந்தும் கூட போலீஸ் நிலையத்திலிருந்து தமிழர் விடுதலை இயக்கக் கைதிதப்பிய சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் விடுதலை இயக்க அலுவலகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தியஜெயங்கொண்டம் போலீசார், அங்கிருந்த சுந்தர்ராஜன், தங்கசாமி, செந்தில் மற்றும் செல்வன் ஆகிய நான்குபேரைக் கைது செய்தனர்.
அந்த அலுவலகத்திலிருந்து ஏராளமான வெடிகுண்டுகளைக் கைப்பற்றிய போலீசார், அந்த அலுவலகத்திற்கு சீல்வைத்தனர்.
இந்தத் தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதியழகனைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைதுசெய்தனர். அவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் சில துப்பாக்கிக் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
பின்னர் மதியழகனின் கால்களை சங்கிலியால் கட்டிப் போட்டு, ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியழகன் எப்படியோ போலீசாருக்கு "அல்வா" கொடுத்துவிட்டுத் தப்பிவிட்டான்.
இதையடுத்து ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவனைத் தேடி தமிழகம் முழுவதும்போலீசார் வலை விரித்துள்ளனர்.
கடந்த மார்ச் 7ம் தேதிதான் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசார் "கண்களில் மண்ணைத் தூவிவிட்டு"இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதர் அலி மட்டும் அடுத்த இரு நாட்களிலேயே பிடிபட்ட நிலையில், இமாம் அலியை இன்னும் போலீசார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications