அன்னதானத் திட்டத்திற்கு ஜெ.விடம் குவிந்தது நிதி
சென்னை:
கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ள அன்னதான திட்டத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார்.ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேல் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று வழங்கப்பட்டது.
அமைச்சர் எம்.சி.சம்பத் 2 கோவில்களின் அன்னதான திட்டத்திற்காக மொத்தம் ரூ. 1 லட்சத்து 2 ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இதுதவிர பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வெள்ளிக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து நிதிவழங்கினார்கள்.
500 மகளிர் தொழிற்கூடங்கள்:
தமிழகத்தில் 500 பெண்களுக்கான தொழிற் கூடங்களை விரைவில் துவக்கி வைக்கவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் தெரிவித்தார்.
தற்போது மகளிருக்கான 50 தொழிற் கூடங்கள் தயாராக உள்ளன. மேலும் 450 தொழிற் கூடங்கள் தயாராகி வருகின்றன. இவைஅமைக்கப்பட்டு முடிந்தவுடன் அவற்றை நானே தொடங்கி வைப்பேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னை தரமணி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகரின் பெயர் அறிவு நகராகமாற்றப்பட்டுள்ளது. விரைவில் இது செயல்படத் தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications