கோடை மழைக்கு தமிழகத்தில் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் கோடை மழைக்கு நேற்று (வியாழக்கிழமை) 2 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் "திடீர்" கோடை மழை மக்களைப் பெரும் மகிழ்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. மேலும் திண்டுக்கல் மற்றும் ஊட்டியில் ஆலங்கட்டி மழையும் பெய்து குழந்தைகளையும் மகிழ்ச்சிஅளித்துள்ளது.

இந்த சந்தோஷங்களுக்கிடையில் இந்தக் கோடை மழை சில உயிர்களையும் பலி வாங்கியுள்ளது.

விருதுநகர் அருகே மந்தனாபுரம் என்ற கிராமத்தில் ஒரு பெண்ணும், வாசுதேவநல்லூரில் ஒரு பெண்ணும் வயலில்வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் மதுரையில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைமிதித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாரி என்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மேலும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் இந்த மழை மற்றும்சூறைக் காற்றுக்கு நாசமாயின.

இதற்கிடையே தர்மபுரி மாவட்டம் பெண்ணகரம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வயலில் வேலைசெய்து கொண்டிருந்த ஒரு விவசாயியை மின்னல் தாக்கியது.

இதில் உடல் கருகிய அந்த விவசாயி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 ஆடுகளும்கொல்லப்பட்டன.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+