உயிர்களைக் காப்பாற்றிய பன்னீர்செல்வம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ஒரு குடும்பத்தை முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வம் காப்பாற்றியுள்ளார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கலிபா என்பவர் தனது குடும்பத்துடன் வேனில் சென்னை வந்துள்ளார்.செங்கல்பட்டு பாலாற்றுப் பாலம் அருகே அந்த வேன் மீது படுவேகத்தில் வந்த லாரி மோதியது.

இதில் வேன் டிரைவர் அங்கேயே இறந்துவிட மற்றவர்கள் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தனர். அனைவரும்உயிருக்குப் போராடினர். நள்ளிரவான அந்த நேரத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை.

அப்போது மதுராந்தகத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் மற்றும் இன்னொருஅமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் கார்கள் அங்கு வந்தன.

விபத்தில் சிக்கிய வேனைக் கண்டதும் காரை நிறுத்தி இறங்கிய பன்னீர் உடனடியாக மாவட்ட காவல்துறைக்குதகவல் கொடுத்தார். உயிருக்குப் போராடிய அனைவரையும் தங்களது பாதுகாவலர்கள் உதவியுடன் வேனில்இருந்து மீட்டனர் இரு அமைச்சர்களும்.

பன்னீர் அழைத்ததால் உடனடியாக போலீஸ் வேன்களும் தீயனைப்புப் படையினரும் ஆம்புலன்ஸ்களும் பறந்துவந்தன. காயமடைந்தவர்களை உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அத்தோடு வேலை முடிந்தது என்று விட்டுவிடாத பன்னீர் தனது காரையும் ஆம்புலன்ஸ்களின் பின்னால்செங்கல்பட்டுக்கு ஓட்டச் சொன்னார். அங்கு மருத்துவமனையில் டாக்டர்களைச் சந்தித்து உடனடியாக சிகிச்சைதரவும் உத்தரவிட்டார். அவருடன் போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரனும் மருத்துவமனைக்குச்சென்றார்.

பன்னீரே மருத்துவமனைக்கு வந்ததால் அரைகுறை தூக்கத்தில் இருந்த அந்த மருத்துவனை டாக்டர்கள், நர்ஸ்கள்,இரவுப் பணியாளர்கள் உடனே செயலில் இறங்கி அனைவரின் உயிரையும் காப்பாற்றினர்.

காயமடைந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏவான பழனிச்சாமிக்கும் இந்தவிபத்து குறித்து செய்தியை பன்னீர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட காயமடைந்தவர்களுடன் 4 மணி நேரம் இருந்துவிட்டு அதிகாலையில் தான் பன்னீர்செல்வமும்நயினார் நாகேந்திரனும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தத் தகவலை பன்னீர் யாரிடமும் சொல்லவில்லை. வழக்கமான தனது அமைதியுடன் இருந்துவிட்டார்.

ஆனால், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமானபழனிச்சாமி மூலம் இத் தகவல் நேற்று சட்டசபையில் அனைவருக்கும் தெரியவந்தது.

சட்டசபையில் இத் தகவலை வெளியிட்டுப் பேசிய பழனிச்சாமி தனது உள்ளம் கனிந்த நன்றியைபன்னீர்செல்வத்துக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் தெரிவித்தார். தனது தொகுதியைச் சேர்ந்த மக்கள்அனைவருமே பன்னீரின் இந்தச் செயலுக்காக நன்றி தெரிவிப்பதாக கண்கள் கலங்கியவாறு கூறினார்.

அப்போதும் தனது கண்ணியமான சிரிப்புடன் அமைதியாய் அமர்ந்திருந்தார் பன்னீர்செல்வம்.

இதையெல்லாம் கேட்டு ஆச்சரியமடைந்த முதல்வர் ஜெயலலிதா கைதட்டி பன்னீரைப் பாராட்ட அனைத்துக்கட்சியினரும் மேஜைகளைத் தட்டி அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

அனைவரும் தன்னைப் பாராட்டுவதைக் கண்டு கண் கலங்கினார் பன்னீர்செல்வம்.

தன்னுடன் வந்த இன்னொரு அமைச்சரான நயினாரைத் திரும்பிப் பார்த்த பன்னீர், அவருக்கும் சேர்த்து கைதட்டுங்கள் என்பதை பார்வையாலேயே அனைவருக்கும் கூறி விட்டு குனிந்து கொண்டார் தனது வழக்கமானவெட்கத்துடன்.

கை தட்டல் இன்னும் அதிகரித்தது.

எரிகிற வீட்டில் கூட பிடுங்கிச் செல்லும் நம் ஊர் அரசியல்வாதிகளைப் பார்த்து வெறுத்துப் போயுள்ள நமக்குபன்னீர் ஒரு வரப்பிரசாதம் தான்.

வெல்டன் பன்னீர்!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+