வாஜ்பாயை ஜெ. ஏன் சந்திக்கவில்லை ? - பன்னீர் விளக்கம்
சென்னை:
சென்னையில் இருந்து கொண்டே முதல்வர் ஜெயலலிதாவை பார்க்காமல் தவிர்த்து வரும் மேயர் ஸ்டாலினைவிட்டு விட்டு, டெல்லியில் இருக்கும் பிரதமரை ஜெயலலிதா சந்திக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிகுறை கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
மேயர் ஸ்டாலின் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று சமீபத்தில் சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.அதற்கு கருணாநிதி அளித்த பேட்டியொன்றில், பிரதமர் வாஜ்பாயை முதல்வராகப் பதவியேற்ற பின் ஜெயலலிதாஏன் சந்திக்கவில்லை என்று வினா எழுப்பியிருந்தார்.
இதற்கு முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் பதில்அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு கடுமையான பணிகள் உள்ளன. அவர் மிகவும் "பிசி"யாக உள்ளார். இதன் காரணமாகவேஅவரால் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்க முடியவில்லை.
ஆனால் சென்னையிலேயே இருந்து கொண்டு, சென்னையிலேயே இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவைசந்திக்காமல் இருக்கிறார் மேயர் ஸ்டாலின். அவரைக் கண்டிப்பதை விட்டு விட்டு டெல்லியில் இருக்கும் பிரதமரைபோய் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்று சப்பை கட்டு கட்டுகிறார் கருணாநிதி. இது வேடிக்கையாக உள்ளது.
சட்டசபையில் முதன் முதலாக சந்தித்தபோதாவது முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியிருக்க வேண்டும்.அல்லது போனிலாவது வாழ்த்தியிருக்கலாம்.
இவற்றில் எதையுமே ஸ்டாலின் செய்யவில்லை என்று கூறினார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications