காவல் நிலையம் மீது தாக்குதல்: வீடு வீடாக பொது மக்களை கைது செய்யும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திங்களூர் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அப் பகுதியில் போலீசார் வீடு வீடாகச்சென்று பொது மக்களை கைது செய்து வருகின்றனர்.

கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வீடு வீடாக சென்று பொதுமக்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ள.

கள் இறக்கியதாக கூறி ஒரு விவசாயியை திங்களூர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்து தாக்கினர்.

ஆனால், அவர் பதனீர் தான் இறக்கிக் கொண்டிருந்தார் என்றும் அவரிடம் போலீசார் ஓசியில் பதனீர் கேட்டபோது அவர் தரமறுத்ததால் கள் இறக்கியதாக போலியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து போலீசார் அடித்தனர் என அப் பகுதிபொது மக்கள் தெரிவித்தனர்.

போலீஸ் தாக்குதலில் அவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். இதையடுத்து இந்தப் பிரச்சனை வெடித்தது.

இதைத் தொடர்ந்து திங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல்நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த திங்களூர் காவல் நிலையத்தைஆட்சித் தலைவர் பாலச்சந்திரன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவல் நிலையத்தை தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும். தாக்குதல் முழுவதும் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர்என்றார் அவர்.

இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் வீடு வீடாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் அனைவரையும் கைதுசெய்து வருகின்றனர். இதில் பல வீடுகளில் அடாவடியாகவும் போலீசார் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

போலீசாரின் இச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்களூர் பகுதியில் பதனி இறக்கிக் கொண்டிருந்த விவசாயி சாமியப்பன் என்பவரை கள்இறக்கியதாக கூறி போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடந்த தாக்குதலில் அவர்மயக்கமடைந்துள்ளார்.

இந்தத் தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோபம் கொண்டு காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.தங்கள் தவறை போலீசார் திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, வீடு வீடாக சென்று பொதுமக்களைக் கைது செய்து வருவதுகண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் ஈரோடு மாவட்டம் திங்களூர் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீதுதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+