நாளை வாஜ்பாய் சிங்கப்பூர் பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் மூன்று நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார்.

அங்கு அதிபர் எஸ்.ஆர். நாதன், பிரதமர் கோ ஜோக் தொங், அமைச்சர்கள் மற்றும் முக்கிய இந்தியவம்சாவளியினரைச் சந்தித்துப் பேசுகிறார்.

பின்னர் அவர் அங்கிருந்து கம்போடியா செல்கிறார். அங்கு இரு தினங்கள் வாஜ்பாய் தங்கியிருப்பார்.

கம்போடியாவுக்குச் செல்ல அவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பயன்படுத்தவுள்ளார். இதுவரை ஏர்இந்தியாவின் ஜம்போ விமானங்களைத் தான் பிரதமர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், கம்போடியத் தலைநகர் நாம்பெங்கில் பெரிய ரக விமானங்களை இறக்க முடியாது என்பதால் இந்தியன்ஏர்லைன்சின் ஏ-320 ரக சிறிய விமானத்தை அவர் பயன்படுத்தவுள்ளார்.

முன்பொருமுறை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வளைகுடா நாடுகளுக்குச் செல்ல ஏர் இந்தியாவிமானத்தில் செல்ல இருந்தார். ஆனால், அந்தப் பயணத்தைத் துவக்குவதற்கு சில நாட்களுக்கு முன் அந்தவிமானத்தில் சில வயர்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து அவசர அவசரமாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

ஏர்-இந்தியா விமானத்தில் வயர்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பல அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டனர்.விமானத்தின் பாதுகாப்பு குறித்து சோதிக்க அப்போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதிஜெயில் சிங் தானே அந்த விமானத்தில் மும்பை வரை சென்று வந்தார். இதன் பின்னர் தான் அதை பிறபயணிகளுக்குப் பயன்படுத்த அனுமதித்தார்.

அதே போல ராஜிவ் காந்தியும் ஒருமுறை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை வெளிநாட்டுக்குச் செல்லபயன்படுத்தியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் இந்தியப் பிரதமரை இந்தியன் ஏர்லைன்ஸ் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+