காங்கிரசுடன் தமாகா இணைப்பு எப்போது? - வாசன் வீட்டில் அவசர ஆலோசனை
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் தங்கள் கட்சியை இணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக தமாகா கட்சிநிர்வாகிகள் இன்று (சனிக்கிழமை) மாலை அக்கட்சித் தலைவர் வாசன் வீட்டில் அவசரமாகக் கூடுகின்றனர்.
கடந்த 1ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவுடன் இணைப்புக்கானமுதற்கட்டப் பேச்சுவார்த்தையை வாசன் நடத்தி முடித்து விட்டார்.
தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வாசன் முடிவுசெய்தார். "டேக் யுவர் ஓன் டைம்" என்று சென்னிதாலாவும் கூறிவிட்டார்.
இந்நிலையில் வாசன் வீட்டில் இன்று மாலை தமாகா நிர்வாகிகள் அவசரமாகக் கூடுகின்றனர். தமாகாஎம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
ஹக்கீம் உள்ளிட்ட 14 எம்.எல்.ஏக்கள் காங்கிரசுடன் தமாகாவை இணைப்பதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிவந்தாலும், அவர்களை சரிக்கட்டும் முயற்சியில் வாசன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
வெகு விரைவில் இணைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
