தலித் பஞ்சாயத்துகளில் நாளை தேர்தல்: பெரும் பதற்றம்
மதுரை:
தலித் பஞ்சாயத்துகளில் நடக்கவுள்ள தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின்தலைவர் திருமாவளவனுக்கு அரசு தடை விதித்துவிட்டது.
உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு பலமுறை தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இப்போது தான் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது.
தலைவர் பதவிகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இங்கு தேர்தலை நடத்தவிடாமல் இன்னொரு ஜாதியினர்தடுத்து வந்தனர். இந்த ஜாதியினரைச் சேர்ந்த சிலரின் அடாவடியை அடக்கி தேர்தலை நடத்துவதை விட்டுவிட்டுஇவர்களிடம்போய் அரசு கெஞ்சிக் கொண்டிருந்தது.
இப்போது வேறு வழியில்லாமல் அங்கு தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள தலித்கள் பலரும் பிரச்சாரம் செய்யவேமுடியாத நிலை உள்ளது. உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களைத் தாக்குவார்கள் என்ற நிலை ஏற்பட்டதால்தலித் பகுதிகளை மட்டுமே வேட்பாளர்கள் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெரும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு கூட இந்த தலித் வேட்பாளர்களால் உயர் ஜாதியினர் வசிக்கும்பகுதிக்குள் நுழைய முடியவில்லை.
அதிலும் திருமாவளவனை பிரச்சாரத்துக்கே வர விடாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துவிட்டார். இவர்வந்து பிரச்சாரம் செய்தால் உயர் ஜாதியினருக்கு கோபம் வரும் என்பதாலும் வன்முறை வெடிக்கலாம் என்பதாலும்அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
தலித்துக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் தலித் வேட்பாளர்கள் பிரச்சாரம் கூட செய்ய முடியாத அளவுக்குதமிழகத்தில் நிலைமை மோசமாகியுள்ளது.
நாளை தேர்தலின்போதும் இந்த உயர் ஜாதியினர் தாக்குதல் நடத்தலாம் என்பதால், இந்த இரு கிராமங்களிலும்பெரும் பதற்றம் நிலவுகிறது. தலித்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications