தமிழகத்தில் கடும் வெயில்: சிறுவன் சுருண்டு விழுந்து சாவு
சிவகாசி:
தமிழகத்தில் வெயில் கொடுமை மிக பயங்கரமாகி உள்ளது. சில தினங்களுக்கு முன் மழை பெய்ததால் கொஞ்சமதனிந்திருந்த வெப்பம் மீண்டும் அதிகரித்துள்ளது.
சிவகாசியில் சாலையில் நடந்து சென்ற சிறுவன் கடும் வெயிலில் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்துபோனான்.
சாத்தூர் ரோட்டில் மீனம்பட்டி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. வெயில் நடந்து தளர்ந்து போன அச் சிறுவன்ஒரு டீ கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவன் மிகவும் களைத்துப் போய் இருப்பதைக் கண்ட அங்கிருந்தபொது மக்கள் அவனுக்கு சோடா வாங்கித் தந்தனர்.
அதை குடித்த சிறுது நேரத்தில் அவன் சுருண்டு விழுந்து மயங்கினான். சிறிது நேரத்தில் அவன் இறந்தான். நீண்டதூரம் வெயிலில் அவன் நடந்து வந்திருப்பான் என்று தெரிகிறது.
மயங்கும் முன் தனது ஊர் சின்னாளப்பட்டி என்று மட்டும் கூறியிருக்கிறான். அவனது பெயர் விவரம்தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் நடமாட்டமே சாலைகளில் குறைந்து வருகிறது.
நள்ளிரவு வரை தனல் வீசுகிறது.












Click it and Unblock the Notifications