தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நீதிபதிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதால் தமிழகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

நான் நீதித்துறை, நீதிபதிகள் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

பொதுவாக தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத ஒரு மினி எமர்ஜென்சி நடைமுறையில் உள்ளது. அதனால்எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆச்சரியப்படத் தேவையில்லை.

சட்டம்-ஒழுங்கு கெடுகிற அளவுக்கு தமிழகத்தில் தினற்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, கோயில்-சர்ச்உண்டியல் உடைப்பு, கற்பழிப்பு, ஈவ்-டீசிங், முக்கியப் பிரமுகர்கள் காணாமல் போதல், அவர்கள் கொல்லப்படுதல்போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

அதைப் பற்றி எடுத்துச் சொன்னால் அலட்சியப்படுத்துகிற நிலைமை வளர்ந்து வருகிறது. இதையெல்லாம்வைத்துத்தான் இங்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது என்று சொல்கிறேன்.

தத்துவப்படி பார்த்தால் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதுதான் சரி. ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.

மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளபடி, தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதற்குமுன்பே அந்தத் தகுதி பற்றி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை நீக்க சட்டம் கொண்டு வரப்படுமானால், அது வேண்டும் என்றேகோபத்திலும் ஆத்திரத்திலும் பழிவாங்கும் போக்கில் செய்யப்படும் காரியமாகும் என்றார் கருணாநிதி.

இந்தச் சட்டம் கொண்டு வரப்படும்போது அதை எதிர்ப்போம் என்று பாஜகவின் தமிழகப் பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாஜகவின் கொள்கையே அதுதான் என்று பதிலளித்தகருணாநிதி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் அதிகமாக கட்சி வேறுபாடில்லாமல் அனைவரும்ஆதரிக்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+