இந்திய-ரஷ்யா இணைந்து தயாரித்த நவீன ஏவுகணை
மாஸ்கோ:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டாக வடிவமைத்துள்ள பிரம்மோஸ் ஏவுகணைகள் அடுத்த ஆண்டு முதல்இரு நாட்டு ராணுவத்திலும் சேர்க்கப்படவுள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எத்தனையோ வகை ஆயுதங்களை வாங்கியுள்ளது. ஆனால், இப்போது தான் இருநாடுகளும் இணைந்து ஒரு ஆயுதத்தை வடிவமைத்துள்ளன.
இந்த ஏவுகணை கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது. மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களைக் கூடஇந்த ஏவுகணை சிதறடிக்கும் திறன் கொண்டது.
கடந்த ஜூன் மாதம் இந்த ஏவுகணை ஒரிஸ்ஸாவில் உள்ள சன்டிபூர் அருகே கடலில் வெற்றிகரமாகசோதனையிடப்பட்டது.
இந்திய பாதுகாப்புத்துறையின் டி.ஆர்.டி.ஓ. அமைப்பும் ரஷ்ய ராணுவமும் இணைந்து இந்த ஏவுகணையைத்தயாரித்துள்ளன.
ஒலியைவிட 2.8 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 300 கி.மீ. தூரத்தில் உள்ள கப்பலைக்கூட தாக்கும்.
இந்த ஏவுகணைக்கு இந்திய நதியான பிரம்மபுத்திராவையும் ரஷ்ய நதியான மோஸ்க்வாவையும் சேர்த்துபிரம்மோஸ் என்று பெயர் வைத்தவர் இந்திய விஞ்ஞானி டாக்டக் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்த ஏவுகணைவடிவமைப்பிலும் மிகுந்த பஙகு வகித்தவர்.
இந்த ஏவுகணைக்கான ஆன்போர்ட் கம்ப்யூட்டர், இன்டர்னல் கைடன்ஸ் சிஸ்டம் ஆகியவற்றை இந்தியாதயாரித்தது. ஏவுகணைக்கான திர எரிபொருள் என்ஜின்கள் மற்றும் வெடி மருந்துகளை ரஷ்யா தயாரித்தது.
முதலில் இந்த ஏவுகணைகள் கடற்கரையில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டன. இப்போது இவற்றைகப்பல்களில் இருந்தும் சுகோய் ரக போர் விமானங்களில் இருந்தும் செலுத்தும் வகையில்வடிவமைக்கப்படவுள்ளது.
அதே போல இந்தியாவுக்கு அமுர் ரக நவீன நீர்மூழ்கிகளை வழங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications