போலீஸ் மிரட்டலால் காலியாகும் கிராமங்கள்: வீடுகளை விட்டு 3,000 பேர் ஓட்டம்
பெருந்துறை:
பெருந்துறை அருகே போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் தாக்கியதையடுத்து போலீசார் நடத்தி வரும் கடும்தாக்குதலை சமாளிக்க முடியாத 4 கிராமங்களைச் சேர்ந்த 3,000 பேர் ஊர்களை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர்.
இதனால் அந்த கிராமங்களே வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது போலநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியப்பன்.இவர் கள் இறக்கியதாகக் கூறி போலீசார் அவரை அடித்து உதைத்தனர்.
இதையடுத்து அவர் மயங்கி சரிந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சாமியப்பனை உடனடியாககோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இத் தகவலறிந்த அந்தப் பகுதி பொது மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டு சாமிநாதனைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து அங்கு வந்த கோபி துணை போலீஸ் சூப்பரின்டெண்ட் சோமசுந்தரம் பொது மக்களை அடித்துநொறுக்கிவிடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து அவருக்கும் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது.
அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு அடித்து உதைக்க ஆரம்பித்தனர். இதில்அவருக்குக் காயம் ஏற்பட்டு, சட்டையும் கிழிந்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்பொதுமக்களை அடித்து விரட்டினர். இதனால் கூட்டம் சிதறி ஓடியது.
இதன் பின்னர் நூற்றுகணக்கான போலீசார் போலநாயக்கனூர், போலநாயக்கனூர் காலனி, தெற்குப் பாளையம்,காசுக்காரம் பாளையம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக நுழைந்து பொது மக்களை கைது செய்து வருகின்றனர்.
பலருக்கு அடியும் விழுகிறது. இதனால் அந்த ஊர்களைக் காலி செய்துவிட்டு மக்கள் அனைவரும் ஓடஆரம்பித்துவிட்டனர். இந்த கிராமங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பாட்டிகளும் குழந்தைகளும் மட்டுமே வீடுகளில் உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் வீடுகளை விட்டுஓடிவிட்டனர்.
அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அங்கு ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications