சிங்கப்பூரில் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் இன்றுசிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் கம்போடியா செல்கிறார்.
சிங்கப்பூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர் அதிபர் எஸ்.ஆர். நாதன், பிரதமர் கோ ஜோக் தொங் மற்றும்அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
டெலிகாம் மற்றும் விமானத்துறைகளில் இரு நாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில்ஒப்பந்தகளில் வாஜ்பாய் கையெழுத்திடவுள்ளார்.
பிரதமருடன் தனியார்மயமாக்கல் துறை அமைச்சர் அருண்ஷோரி உள்பட இந்திய தொழிலதிபர்களும் பெரும்எண்ணிக்கையில் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
கடந்த அக்டோபரிலேயே சிங்கப்பூர் செல்ல வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தப்பயணம் ரத்தானது.
சிங்கப்பூர் அதிபரிடம் 11 அரிய இந்திய கலைப் பொருள்களையும், பிரிட்டிஷ் ஆட்சியில் தெற்காசியா எப்படிஇருந்தது என்பதை விவரிக்கும் 950 மைக்ரோ பிலிம்களையும் வாஜ்பாய் பரிசளிப்பார். கடந்த 2000ம் ஆண்டில்இந்திய ஜனாதிபதி கேர்.ஆர்.நாராயணன் சிங்க்பபூர் சென்றபோதும் இதே போன்ற கலைப் பொருள்களைபரிசளித்தார்.
வாஜ்பாயும் சிங்கப்பூர் பிரதமர் கோவும் உதவியாளர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனியே நாளைசந்தித்துப் பேசுகின்றனர். பின்னர் அதிபர் நாதனை வாஜ்பாய் சந்திப்பார்.
9ம் தேதி தாவரவியல் பூங்காவுக்கும் செல்கிறார். அங்கு ஆர்கிட் ரக செடிக்கு இந்திய-சிங்கப்பூர் உறவை குறிக்கும்பெயரைச் சூட்டுவார்.
கடந்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள முதலீடு சுமார் 1,100 மில்லியன் அமெரிக்கடாலர்களாகும். இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் அனுப்பும் பணமும் அடங்கும். இதன் மூலம்இந்தியாவில் மிக அதிக அளவில் முதலீடு செய்யும் 11வது மிகப் பெரிய நாடு என்ற நிலையை சிங்கப்பூர்அடைந்துள்ளது.
மேலும் ஆசியான் அமைப்பில் இந்தியாவையும் உறுப்பினராகச் சேர்க்க கம்போடியாவும் சிங்கப்பூரும் பெரும்ஆதரவு தந்து வருகின்றன.
சிங்கப்பூர் புறப்படும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், இந்தப் பயணம் ஆசிய-பசிபிக்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் பலமடங்கு மேம்படுத்தும்.
சிங்கப்பூர் பிரதமருடன் வர்த்தகம் மட்டுமின்றி இந்தப் பகுதியில் நிலவி வரும் அனைத்து அரசியல் விவகாரங்கள்குறித்தும் பேசுவேன். சிங்கப்பூரில் தென்கிழக்கு ஆசிய கல்வி மையத்தில் உரையாற்றவுள்ளேன்.
கம்போடியாவில் அந் நாட்டு மன்னர் நரோதம் சிகானுக், பிரதமர் ஹூன் சென் ஆகியோருடன் இரு தரப்புஉறவுகளை மேம்படுத்த பேச்சு நடத்துவேன்.
அந் நாட்டில் சியேம் ரீப் பகுதியில் உள்ள அன்க்கோர் கோவிலுக்குச் செல்ல இருக்கிறேன்.
இந்திய மக்களின் நல்வாழ்த்துகளை இந்த இரு நாடுகளுக்கும் ஏந்திச் செல்கிறேன் என்றார் பிரதமர்.
விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அவரை வழியனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications