"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு": எம்.பிக்களுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
கட்சி சார்பற்ற முறையில் தொகுதி மேம்பாட்டுக்காக எம்.பிக்கள் பாடுபட வேண்டும் என்று பாரதீய ஜனதாகட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எஸ். திருநாவுக்கரசர் கூறினார்.
புதுக்கோட்டையில் நடந்த "தூய்மை புதுகை" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்சி சார்பற்ற முறையில், மாநில நலனைக் கருத்தில் கொண்டும், தொகுதி மக்களைமனதில் கொண்டும் பேச வேண்டும்.
தொகுதிகளின் குறைகளைப் போக்க கட்சி சார்பற்ற முறையில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
புதுக்கோட்டை தொகுதிக்கு இந்த ஆண்டு தொகுதி நல நிதியிலிருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கியுள்ளேன் என்றார்திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications