வன்முறையை தடுக்க குஜராத் அரசுக்கு வீரமணி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள்உடனடியாக எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
குஜராத்தில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவது கவலை தருகிறது. இதனால் மக்கள் மனதில் அச்சம் நீடித்துவருகிறது.
இந்த நிலையைப் போக்க மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் வசிக்கும் அத்தனை தரப்பு மக்களின் மனதிலும் நம்பிக்கை ஏற்படும் வகையில் உறுதியானநடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications