திருச்சி: பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல்லிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்த் திசையில் திருவாசியை நோக்கி மற்றொருபஸ் சென்று கொண்டிருந்தது.
திருவாசி அருகே வந்து கொண்டிருந்தபோது, இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் மிகப் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்தப் பயங்கரமான விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 36 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஐந்து பெண்களும் இரு குழந்தைகளும் அடக்கம்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications