நாளை தமிழகத்தில் கடையடைப்பு: வணிகர்கள் உறுதி
சென்னை:
தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு நடக்கும் என்று தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
அரிசி, கோதுமை மீது வணிக வரி விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து 9ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம்முழுவதிலும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும்திட்டமிட்டபடி கடையடைப்பு நடைபெறும் என்று பேரவைத் தலைவர் வெள்ளையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அறிக்கையொன்றில் அவர் கூறுகையில்,
அரிசி, கோதுமை மீது வரி விதித்திருப்பது ஊழலுக்கு வழி வகுக்கும். வியாபாரிகள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள். எனவே இதை வாபஸ் பெற வேண்டும்.
கடையடைப்பு போராட்டத்தில் சென்னை நகர மாவு மில் உரிமையாளர்கள் சங்கம், கொத்தவால்சாவடி மொத்தவியாபாரிகள் சங்கம் பங்கு பெறும் என்று கூறியுள்ளார் வெள்ளையன்.












Click it and Unblock the Notifications