சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல்: வழக்கம் போல் அதிமுகவினர் அராஜகம்
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 99வது வார்டுக்கு இன்று நடந்த தேர்தலின்போது, அங்குள்ள 6 வாக்குச் சாவடிகளைக்கைப்பற்றிய அதிமுகவினர் சராமாரியாகக் கள்ள ஓட்டுக்களைப் போட்டனர்.
சென்னை-பெரம்பூரில் உள்ள 99வது வார்டு திமுக கவுன்சிலர் ஆனந்தன் இறந்ததையடுத்து அங்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது.
இந்த வார்டில் உள்ள கே.என். ராஜன் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரானபாலகங்கா தலைமையில் வந்த அதிமுகவினர், வாக்களிப்பதற்காக அங்கு வந்திருந்த மக்களை அடித்து விரட்டினர்.
பின்னர் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளை மிரட்டி, அங்கிருந்த வாக்குச் சீட்டுக்களைக் கைப்பற்றிய அதிமுகவினர்,சராமாரியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுவிட்டு அசால்டாக நடந்து சென்றனர்.
இந்த வார்டில் உள்ள மேலும் ஐந்து வாக்குச் சாவடிகளையும்கூட அதிமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட்டனர். 99வது வார்டு திமுக வேட்பாளரான கல்பனாவை ஓட்டே போட விடாமல் தடுத்து அாஜகம் செய்ததுஇந்தக் கும்பல்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி, கல்பனா உள்ளிட்டஏராளமான திமுகவினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் கள்ள ஓட்டு போட்டவர்களைவிட்டுவிட்டு அதைக் கண்டித்து சாலை மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர்.
இதேபோல் ராயபுரத்தில் அமைந்துள்ள 16வது வார்டிலும் இன்றைய தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டது.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றிய அதிமுகவினர் வாக்காளர்களை விரட்டி விட்டு வாக்குச் சீட்டுகளில்அதிமுகவுக்கு ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் திமுக எம்.எல்.ஏவான செங்கை சிவம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
மறு தேர்தலுக்கு திமுக கோரிக்கை:
அதிமுகவினரின் இந்த அராஜகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள திமுக இந்த இரண்டு வார்டுகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் கமிஷனுக்கு திமுக இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், அதிமுகவைச் சேர்ந்தஎம்.எல்.ஏ. சேகர் பாபு, சைதை துரைசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் இந்த இரு வார்டுகளிலும்வன்முறையில் ஈடுபட்டனர்.
எனவே இந்த இரு வார்டுகளிலும் தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல்கமிஷனை வற்புறுத்தியுள்ளது.
காங்., இ. கம்யூ. கண்டனம்:
இதற்கிடையே சென்னை மாநகராட்சி வார்டு தேர்தல் வன்முறைகளை காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
அதிமுகவின் அராஜக ஆட்சி எப்போதும் போல தலைவிரித்தாடுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications