தலித் பஞ்சாயத்துக்களில் அமைதியான தேர்தல்
மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள 2 தலித் பஞ்சாயத்து தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடந்துவருகின்றன.
பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தொகுதிகளில் இன்று காலையிலிருந்தே தேர்தல் மிகவும் அமைதியாகநடந்து வருகிறது.
இந்தத் தொகுதி மக்களும் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்குச் சாவடிகளுக்கு வந்து ஆவலுடன் (நீண்டநாட்களுக்குப் பிறகு) தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர்.
நண்பகல் 12 மணி நிலவரப்படி பாப்பாபட்டியில் 37 சதவீத வாக்குகளும் கீரிப்பட்டியில் 22 சதவீத வாக்குகளும்பதிவாகின.
இந்த இரண்டு கிராமங்களிலும் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், இதுவரைஎந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இங்கு நடைபெறவில்லை.
வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு தலித் தொகுதியானநாட்டார்மங்கலத்திலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொட்டக்கச்சியேந்தலிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications