தலித் பஞ்சாயத்துக்களில் தொடங்கியது வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு
சென்னை:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி ஆகிய தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிகளுக்கு பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் இன்று (திங்கள்கிழமை) வாக்குப் பதிவு நடக்கிறது.
3 தலித் பஞ்சாயத்துக்களுக்கும் பல ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. உயர் ஜாதியினரின்மிரட்டல் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை.இதனால் இங்கு தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 3 பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிக்கும் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக இப்போது பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஆகியபஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சிலர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் இங்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப் பதிவையொட்டி 3 பஞ்சாயத்துக்களிலும் தீவிரப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம்மணித்தாறு ஆயுதப் போலீஸ் பயிற்சி மையத்திலிருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகஅழைக்கப்பட்டுள்ளனர்.
காலை 7.30க்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 5.30 வரை நடைபெறும். கீரிப்பட்டியில் 3 வாக்குச் சாவடிகளும்,பாப்பாப்பட்டியில் 4 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு தலித் பஞ்சாயத்துத் தொகுதியான நாட்டார்மங்கலத்தில் யாருமே வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ...
இதற்கிடையே சென்னையிலும் 2 மாநகராட்சி வார்டுகளுக்கு இடைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
வார்டு எண் 16 மற்றும் 99 ஆகிய வார்டுகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
16வது வார்டு வேட்பாளர் இறந்ததாலும், 99வது வார்டு திமுக கவுன்சிலர் ஆனந்தன் இறந்ததாலும் இங்கு தேர்தல்நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications