குஜராத்தில் நிருபர்கள் மீது போலீசார் வெறித் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

அகமதாபாத்தில் சமூக சேவகி மேதா பட்கர் மற்றும் நிருபர்கள் மீது பா.ஜ.க. இளைஞர் அணியினரும் போலீசாரும்சேர்ந்து கடும் தாக்குதல் நடத்தினர்.

இதில் பல நிருபர்களின் மண்டை உடைந்தது. பலர் மயக்கமடைந்தனர்.

குஜராத்தில் யாருக்குமே பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒன்றரை மாதமாக நடந்து வரும் மதக்கலவரங்களில் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த அம் மாநில பா.ஜ.க. அரசு தவறிவருகிறது.

தொடர்ந்து கலவரம் நடந்து வரும் நிலையில் அம் மாநில முதல்வரை காப்பாற்றுவதிலேயே மத்திய அரசு கவனம்செலுத்தி வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந் நிலையில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த ஒரு அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட சமூகசேவகி மேதா பட்கரை பா.ஜ.கவினர் தாக்கினர். இந்த நிகழ்ச்சியை படம் பிடித்த நிருபர்களையும் டிவிகேமராமேன்களையும் போலீசார் கடுமையாகத் தாக்கினர்.

இதில் என்.டி.டி.வி கேமராமேனின் மண்டை உடைந்தது. பல நிருபர்கள் காயமடைந்தனர். பெண் நிருபர்கள் மயங்கிவிழுந்தனர். குஜராத் கலவரத்தில் போலீசாருக்கும் முழுப் பங்கு இருப்பதை பத்திரிக்கைகள் கண்டறிந்துவெளியிட்டதால் பத்திரிக்கையாளர்களை தாக்க அரசே உத்தரவிட்டுள்ளதாக நிருபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.ஏற்கனவே பெயர் நாறிப் போய் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இச் சம்பவம் குறித்து நேற்றிரவில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்ட அவர், நிருபர்களைத் தாக்கிய போலீஸ்அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

அதே நேரத்தில் நிருபர்களை தாக்கிய போலீசாரை ஓடி வந்து தடுத்த துணை கமிஷ்னரான சிவானந்த் ஜாவையும்மோடி இடமாற்றம் செய்துள்ளார். இதன்மூலம் மோடி தனது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டதாக நிருபர்கள்கருதுகின்றனர். நிருபர்களைக் காப்பாற்றிய அதிகாரி மாற்றப்பட்டதற்குகான காரணம் மோடிக்கும் பா.ஜ.கவுக்கும்மட்டுமே தெரியும்.

இவரது காவல் நிலைய எல்லையில் வன்முறை நுழையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இவரைமாற்றியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிருபர்களை மோடி இன்று நேரில் சந்திக்கிறார்.

வாஜ்பாய் கருத்து:

இந் நிலையில் நிருபர்கள் தாக்கப்பட்டது குறித்து சிங்கப்பூரில் உள்ள பிரதமர் வாஜ்பாய் கருத்துத் தெரிவிக்கையில்,

குஜராத்தில் கலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது!!. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மனதில் தான் கலவரம் பெரியஅளவில் நடப்பது போன்ற உணர்வு உள்ளது. உண்மை நிலை அப்படி இல்லை. செய்திகளை வெளியிடும்நிருபர்களே இப்போது செய்தியாகிவிட்டனர். இதக் தாக்குதல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+