தலால் ஆஸ்மி இந்தியாவில் இருக்க தடை இல்லை: குவைத் அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போலி பாஸ்போர்ட்டுடனும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தன் காதலனுடனும் இந்தியாவிற்குத் தப்பி வந்த குவைத்பெண் தலால் ஆஸ்மி இங்கேயே தங்குவதற்கு தடையொன்றும் இல்லை என்று அந்நாட்டு அரசு இன்று(திங்கள்கிழமை) கூறிவிட்டது.

இதுபோன்ற சாதாரண விஷயங்களால் இந்தியாவுடனான உறவு கெட்டுவிடக் கூடாது என்றும் குவைத் அரசுதெரிவித்துள்ளது.

ஆஸ்மியை திரும்பவும் குவைத்துக்கே அழைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறிய டெல்லியிலுள்ளகுவைத் தூதரக அதிகாரி ஒருவர், ஆஸ்மி வயதுக்கு வந்த பெண், அவருடைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கஅவருக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.

ஒரு குவைத் பெண் இங்கு வந்து சிரமப்படக் கூடாதே என்றுதான் நாங்கள் கவலைப்பட்டோமே தவிர அவருடையவாழ்க்கை கெட்டுப் போக நாங்கள் எப்போதும் விரும்பவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்திய அரசியலமைப்பு மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஆஸ்மிக்கு எந்தவிதமான பிரச்சனையும்ஏற்படாமல் அங்கேயே வாழ இந்தியா வழி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த அதிகாரிதெரிவித்தார்.

வெளிநாட்டினரைத் திருமணம் செய்து கொள்ளும் குவைத் பெண்கள் தலை துண்டிக்கப்பட்டோ, கல்லால்எறியப்பட்டோ கொல்லப்படுவார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் கற்பனை என்று கூறிய அந்தஅதிகாரி, வெளிநாட்டினரைத் திருமணம் செய்த குவைத் மக்கள் நிறைய உண்டு என்றும் கூறினார்.

ஆஸ்மியைத் தேடி குவைத் தூதரக அதிகாரியான நமீர் அல்-காருனி சென்னை சென்றபோது, அவருக்கு தமிழகபோலீசார் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற ஒன்றுதான் குறை என்றும் அந்த அதிகாரி புகார் கூறினார்.

ஆஸ்மியை மட்டுமில்லாமல் அவருடைய வக்கீலைக்கூட காருனி சந்திக்கக்கூடாது என்று கூறிவிட்டதாக தமிழகப்போலீசார் மீது இன்னும் குவைத் அதிகாரிகள் கடுப்புடன் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+