காதலனுடன் குடிசை வீட்டில் குடியேறிய தலால் ஆஸ்மி
கடப்பா:
சமீபத்தில் தன் காதலன் காதர் பாட்சாவைத் திருமணம் செய்து கொண்ட குவைத் பெண் தலால் ஆஸ்மி, ஆந்திரமாநிலம் கடப்பா அருகே உள்ள டி.வி. பள்ளி என்ற கிராமத்தில் குடிசை வீட்டில் குடியேறினார்.
கார், பங்களா, ஏ.சி. என்று குவைத்தில் மிகவும் சொகுசாக வாழ்ந்த ஆஸ்மி, "காதலே ஜெயம்" என்று கூறி தன்காதலனுடன் தற்போது சிறு குடிசை ஒன்றில் குடியேறியுள்ளார்.
காதர் பாட்சாவின் இந்தக் குடிசையில் ஒரே ஒரு நார்க் கட்டில், சில பாத்திரங்கள், ஓரிரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒருபசு மாடு ஆகியவை மட்டுமே உள்ளன.
இருந்தாலும் ஆஸ்மி படு சந்தோஷத்துடனே காணப்படுகிறார். வசதியெல்லாம் எனக்கு பெரிதல்ல என்று படுகூலாகச் சொல்கிறார் அவர்.
நான் என் கணவருடனேயே வாழ விரும்புகிறேன். குவைத் அதிகாரிகள் என்னைச் சந்திக்க முயற்சிப்பது தெரியும்.என்னை மீண்டும் குவைத்துக்கு அனுப்ப நினைத்தால், என் பிணம்தான் அங்கே போகும் என்றும் ஆஸ்மிஉறுதியுடன் கண்ணீர் மல்கக் கூறினார்.
ஆஸ்மியைக் குவைத்துக்கு அனுப்ப விட மாட்டோம் என்று அந்தக் கிராம மக்களும் வரிந்து கட்டிக் கொண்டுநிற்கின்றனர்.
ஆஸ்மிக்குத் தொடர்ந்து பாதுகாப்பு தருவோம் என்று ஆந்திரப் போலீசாரும் உறுதியளித்துள்ளனர்.
பின் குறிப்பு: ஆஸ்மி பிரச்சனை தொடர்பாக தனக்கும் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து, குவைத்தில்வேலை பார்த்து வந்த காதர் பாட்சாவின் அண்ணன் சமீபத்தில் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கொண்டுஇந்தியாவுக்கே வந்து விட்டார்.












Click it and Unblock the Notifications