12 ஆண்டுகளுக்குப் பின் யாழ் நெடுஞ்சாலை திறப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்பாணத்தை தென் இலங்கையுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையை விடுதலைப் புலிகளும் ராணுவமும்இன்று மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டுள்ளனர்.

இதன்மூலம் யாழ்பாணத்தை பொது மக்கள் சாலை வழியாகவே அடைய முடியும். இதுவரை இந்தச் சாலையைவடக்குப் பகுதியில் புலிகளும் தெற்குப் பகுதியில் ராணுவத்தினரும் மூடியிருந்தனர்.

இதனால் பொதுமக்கள் யாழ்பாணத்தை கடல் வழியாக மட்டுமே அடைய முடியும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர். இதனால், வட பகுதித் தமிழர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

12 ஆண்டுகளுக்குப் பின் இந்த சாலை திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாலையைதங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க புலிகளும் ராணுவமும் கடுமையாகப் போரிட்டுள்ளனர். இதில்ஆயிரக்கணக்காணவர்கள் பலியாகியுள்ளனர்.

சாலையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரு தரப்பினரும் ஏராளமான கண்ணிவெடிகளைப் புதைத்தனர்.இதனால், இந்தச் சாலையில் தப்பித் தவறி கால் வைப்பது கூட மிக அபாயகரமானதாக இருந்தது.

இந்தச் சாலையைத் திறந்துவிட நார்வே எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன. சாலையை பொது மக்கள்பயன்பாட்டுக்குத் திறந்துவிட முடிவெடுத்த இரு தரப்பினரும் உடனடியாக கண்ணிவெடிகளை அகற்றஆரம்பித்தனர்.

கடந்த இரு வாரங்களாக இந்தப் பணி நடந்து வந்தது. நேற்று தான் கண்ணிவெடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்தப் பணிகளை கண்காணித்தது.

புலிகள்-ராணுவம் ஒப்பந்தத்தின்படி இந்தச் சாலை கடந்த மாதம் 25ம் தேதியே திறக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இரு தரப்பிலும் நிலவிய சில கருத்து வேறுபாடுகளால் இந்தப் பணி பெரிதும் தாமதமடைந்து வந்தது.

இந் நிலையில் நேற்று இரவு நார்வே தூதுக் குழுவினர் இரு தரப்பினருடனும் பேசி உடனடியாக சாலையைத் திறக்கச்செய்துள்ளனர்.

இன்று காலை நடந்த இந்தச் சாலை திறப்பு நிகழ்ச்சியில் மூத்த ராணுவ அதிகாரிகளும் புலிகளின் பிரதிநிதிகளும்கலந்து கொண்டனர். நிலவளத்துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா செனரத்னாவும் கலந்து கொண்டார்.

சாலை திறக்கப்பட்டவுடன் இதன் வழியே புலிகளின் அரசியல் பிரிவினர் நடந்து வர அவர்களுக்கு யாழ்பாணமக்கள் பெரும் வரவேற்பளித்தனர்.

பின்னர் யாழ்பாணத்தில் புலிகளின் தலைமை அரசியல் அலுவலகத்தை இந்தப் புலிகள் திறந்தனர்.

புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தமிழ் ஈழம் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தக்கழகத்தைச் சேர்ந்த பஸ்கள், வேன்கள் தான் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதியைத் தந்து வருகின்றன.தொடர்ந்து இந்த பஸ் சேவையைத் தொடர புலிகளுக்கு அனுமதி தரப்படுமா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.

கொழும்புவில் இருந்து யாழ்பாணத்துக்கு இடையே (400 கி.மீ. தூரம்) பஸ்களை இயக்க பல தனியார்நிறுவனங்களுக்கு அரசு அனுமதி தந்துள்ளது. இதனால், புலிகளின் பஸ் சர்வீசை நிறுத்த வேண்டும் என நார்வேகுழுவினரிடம் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், இதை புலிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இப்போது இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+