பிரபாகரன் பேட்டி: டிவியில் நேரடி ஒளிபரப்பு
கொழும்பு:
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிக்கை நிருபர்களைச் சந்திக்கும் விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரனின் பேட்டியை இலங்கையின் "ரூபவாஹினி" தொலைக்காட்சியும் வேறு சிலவெளிநாட்டு தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
புலிகளின் கைவசமுள்ள வன்னி பகுதியில் உள்ள கிளிநொச்சியில் பிரபாகரன் கொடுக்கவுள்ள இந்தப் பேட்டியைநேரடியாக ஒளிபரப்ப பல வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இலங்கை அரசுக்குச் சொந்தமான "ரூபவாஹினி" தொலைக்காட்சி நிறுவனமும் இந்தப் பேட்டியை நேரடியாகஒளிபரப்பு செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
அப்படி நேரடியாக ஒளிபரப்ப முடியவில்லை என்றால், பேட்டியை வீடியோ டேப்பில் பதிவு செய்து, அதைஹெலிகாப்டர் மூலம் கொழும்புவிற்குக் கொண்டுவந்து ஒளிபரப்புவோம் என்று "ரூபவாஹினி"யின் இயக்குநர்நிமல் லட்சபதியராச்சி கூறினார்.












Click it and Unblock the Notifications