இளம்பெண் படுகொலை: குற்றவாளி பிடிபட்டதாக ஜெ. தகவல்
சென்னை:
சென்னை வடபழனி பகுதியில் சுமதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரைக் கொலைசெய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்ற தகவலை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று(திங்கள்கிழமை) அறிவித்தார்.
சுமதி கொலை வழக்கு தொடர்பாக சட்டசபை தமாகா தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
சுமதி கொலை வழக்குத் தொடர்பாக அவருடைய அலுவலகத்தில் பணியாற்றி வரும் முனுசாமி என்பவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று சுமதியின் வீட்டுக்கு முனுசாமி சென்று, அவரிடம் ரூ.500 கடன் கேட்டுள்ளார். அவர்பணம் எடுக்கச் சென்றபோது வீட்டில் இருந்த ரூ.10,000 பணம் மற்றும் நகைகளைப் பார்த்த முனுசாமி,இவற்றுக்காகத்தான் சுமதியைக் கொன்றுள்ளார்.
முனுசாமியிடம் இருந்து ரூ.10,000 பணம், நகை, அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப்போலீசார் பறிதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் விரைவாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இது பாராட்டத்தக்கது.
அதேபோல மற்ற குற்றச் செயல்களிலும் விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்குஅறிவுறுத்தியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications