தொழுகைக்கு எதிராக வழக்குப் போட்டவருக்கு அபராதம்
டெல்லி:
முஸ்லீம்கள் பொது இடங்களில் நமாஸ் செய்வதைத் தடுக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவைதள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இந்த மனுவைத் தாக்கல் செய்த நபருக்கு 10,000 ரூபாய் தண்டனையும் விதித்துதீர்ப்பளித்தது.
உங்களைப் போன்ற நபர்களால் தான் நாட்டில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது என்று மனு தாக்கல்செய்தவரை நீதிபதிகள் கோபத்துடன் கண்டித்தனர்.
மசூதிகள் மற்றும் குறிப்பிட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதால் பிறமதத்தினருக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே, பிற இடங்களில் நமாஸ் செய்வதைத் தடை செய்து உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்று கோரி வாரணாசியைச் சேர்ந்த அருண்குமார் ஜெய்ஸ்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் கிர்பால், வெங்கட்ராம ரெட்டி, அரிஜித் பஸ்ஸாயத் ஆகியோர் அடங்கிய டிவிசன்பெஞ்ச், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
நீதிபதிகள் கூறுகையில், இந்த மனு மிகவும் விஷமத்தனமானது. உங்களைப் போன்ற நபர்களால் தான் ரத்தம்வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இதைத் தாக்கல் செய்த ஜெய்ஸ்வால் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த நிதி பிரதமரின் நிவாரணநிதிக்கு அனுப்பப்படும். 4 வாரத்துக்குள் அந்தப் பணத்தைக் கட்ட வேண்டிய பொறுப்பு இந்த நபருக்காக வாதாடும்வழக்கறிஞர் சுனில் குமார் சிங்குடையது. இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளவும் அவருக்கு அவகாசம்தருகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதன் பின்னரும் வழக்கறிஞர் சுனில் குமார் தொடர்ந்து வாதாடினார்.
அப்போது இடை மறித்த நீதிபதிகள், நீங்கள் இந்த வழக்குக்காக தொடர்ந்து வாதாடினல் அபராதத் தொகையைஇரண்டு மடங்காக்கிவிடுவோம் என எச்சரித்தனர். இதையடுத்து அவர் அமைதியானார்.












Click it and Unblock the Notifications