என் போனிலும் கொர கொர சத்தம் வருது: ஜெ.
சென்னை:
தன்னுடைய தொலைபேசிப் பேச்சுக்கள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இன்று (திங்கள்கிழமை) தமிழக சட்டசபையில் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே தனக்கு தொலைபேசி மூலம் நிறைய மிரட்டல் வருவதாக இன்று சட்டசபையில்எஸ்.ஆர்.பி. கூறினார்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறிய எஸ்.ஆர்.பி., இதன் பிறகுஎன்னுடைய தொலைபேசிப் பேச்சுகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றார்.
தமிழக உள்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் என்னுடைய தொலைபேசிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கின்றனர்என்றும் அவர் புகார் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் தேசத்திற்குத் துரோகம்செய்பவர்கள் ஆகியோரின் தொலைபேசிப் பேச்சுக்கள்தான் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்றார்.
என்னுடைய தொலைபேசியில் எப்போதும் "கொரகொர"வென்று நிறையச் சத்தம் வருகிறது. அதனால்தான்என்னுடைய தொலைபேசிப் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறதோ என்று எனக்குச் சந்தேகம் வருகிறது என்றுஎஸ்.ஆர்.பி. கூறினார்.
என்னுடைய தொலைபேசியிலும் கூட இதுபோன்ற சத்தங்கள் வரத்தான் செய்கின்றன. சத்தம் வருவதால் மட்டும்தொலைபேசிப் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக முடிவு செய்துவிடக் கூடாது என்று கூறிய ஜெயலலிதா,தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுபவர்களின் பட்டியலில் எஸ்.ஆர்.பியின் பெயர் இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications