"வாணியம்பாடி எங்களுக்கு வேண்டும்": கேட்கிறது முஸ்லீம் லீக்
சென்னை:
வாணியம்பாடி தொகுதியை தங்களுக்கே அதிமுக ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
கட்சியின் தலைவரான அப்துல் காதர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த முறை வாணியம்பாடி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது எங்களது கட்சிக்கு அத்தொகுதிமறுக்கப்பட்டது.
அப்போது அதிமுகவை அணுகியபோது அடுத்த முறை கண்டிப்பாக எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது வாணியம்பாடி தொகுதிக்கு மே மாதத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
ஆனால் வாணியம்பாடி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது எங்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.
கூட்டணி தர்மப்படி தேசிய லீக் கட்சிக்கே வாணியம்பாடி ஒதுக்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் அப்துல் காதர்.












Click it and Unblock the Notifications